திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சாவன்னா கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 1, 2020

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சாவன்னா கைது

மோசடியில் ஈடுபட்ட இந்திய பிரஜை கைது | Athavan News
மாளிகாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கிராம் 640 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவு இன்று காலை 6.45 அளவில் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். சாவன்னா என அழைக்கப்படும் 51 வயதான மொஹமட் தாஜூடின் மொஹமட் ஷாவுல் ஹமீட் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாளிகாவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad