கிழக்கு மாகாண வர்ண விளையாட்டு விழாவில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கௌரவிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

கிழக்கு மாகாண வர்ண விளையாட்டு விழாவில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கௌரவிப்பு

(எம்.என்.எம்.அப்ராஸ்)

45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 4 X 100 M அஞ்சல் ஒட்டப் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்று கிழக்கு மாகாணத்துக்கு பெருமை தேடி தந்ததற்காக ஜே. எம். இன்சாப் மற்றும் மெய்வல்லூனர் பயிற்றுவிப்பாளர் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் ரிலா ஆகியோர் கிழக்கு மாகாண வர்ண விளையாட்டு விழாவில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா தலைமையில் அம்பாரை ஹாடி தொழிநுட்ப கல்லலூரியின் கேட்போர் கூட மண்டபத்தில் (14) இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது 45 வது தேசிய போட்டியில் அம்பாரை மட்டக்களப்பு, திருகோணமலை, மாவட்டங்களில் இருந்து பங்குபற்றி பதக்கங்களை வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்ளும் கெளரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad