இலங்கையில் வன்முறை அரசியல் கலாச்சாரம் மீண்டும் உருவாக்கப்படுகின்றது - ஐக்கிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

இலங்கையில் வன்முறை அரசியல் கலாச்சாரம் மீண்டும் உருவாக்கப்படுகின்றது - ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையில் வன்முறை அரசியல் கலாச்சாரம் மீண்டும் உருவாக்கப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் கூட்டத்தில் கல் வீச்சு இடம்பெற்றமை குறித்து சுட்டிக் காட்டியுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வன்முறை கலாச்சாரம் உருவாக்கப்படுகின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.

கல் வீச்சில் ஈடுபட்ட குழுவினரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதம் அழிக்கப்படுகின்றது பயங்கர குழுக்கள் ஆயுதமேந்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தின் மூலம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன அதன் விளைவே இந்த சம்பவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வன்முறை அரசியலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் ஜனநாயக ரீதியில் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment