அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் இடையில் விரைவில் பேச்சு வார்த்தை - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் இடையில் விரைவில் பேச்சு வார்த்தை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினைக்கு சமரச தீர்வை காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ் நாட்டு முதலமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற காணொளி மூலமான இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கடந்த 26 ஆம் திகதி இந்திய பிரதமருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற இணையம் மூலமான கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் பேசப்பட்ட விடயம் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நீண்ட காலமான நிலவிவரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினைக்கு இந்திய பிரதமரின் இந்த தீர்மானம் விரைவில் தீர்வை எட்டக்கூடியதாக இருக்கும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோன்று இந்திய மீனவர்களுக்கும் பெரிய பாதிப்பு உண்டு. கூட்டு குழுவின் மூலம் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment