சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க பூரண ஒத்துழைப்பு - கனடா உயர் ஸ்தானிகர் அமைச்சர் அலி சப்ரியிடம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க பூரண ஒத்துழைப்பு - கனடா உயர் ஸ்தானிகர் அமைச்சர் அலி சப்ரியிடம் தெரிவிப்பு

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு கனடா பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கின்றது என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தெரிவித்துள்ளார். 

நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் ஆகியோருக்கிடையில் சினேகபூர்வமான சந்திப்பொன்று இன்று நீதி அமைச்சில் இடம்பெற்றது. 

இதன்போதே கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான அன்னியோன்னிய ஒத்துழைப்புகளை மேலும் அதிகரித்துக் கொள்வது தொடர்பாக இருவருக்குமிடையில் கருத்து பரிமாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment