இளைஞர்களை போன்றே முதியோருக்கும் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

இளைஞர்களை போன்றே முதியோருக்கும் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு

மார்டனா நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்பதும், அது இளைஞர்களை போன்றே முதியவர்களுக்கும் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரசை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இதற்கிடையில், கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த மார்டனா இங்ஸ் நிறுவனமும் ஒன்று. 

அந்நிறுவனம் உருவாக்கியுள்ள மார்டனா தடுப்பூசி நல்ல பலன் தருவது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் பரிசோதனை தற்போது மூன்றாவது கட்டத்தில் உள்ளது. 

இதற்கிடையில், மூன்றாம் கட்ட பரிசோதனைகள் ஒருபக்கம் நடந்துவந்த போதும் முதியவர்களைக்கு தனியாக இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பரிசோதனை நடைபெற்றது.

கொரோனாவால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் முதியோர் என்பதால் அவர்களையும் உள்ளடக்கிய வகையிலான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தடுப்பூசியை உருவாக்குவதில் மார்டனா நிறுவனம் மிகுந்த தீவிரம் காட்டி வந்தது.

இந்நிலையில், தனது மார்டனா தடுப்பூசியை வயது முதியவர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதில் 56 முதல் 70 வயதிற்கு மேற்பட்ட 40 முதியவர்களுக்கு மார்டனா கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டது. 

இந்த பரிசோதனையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட இளைஞக்கு எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுகிறதோ அதே அளவில் முதியவர்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாவது தெரியவந்துள்ளது. 

56 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளிவிட்டு 100 மைக்ரோகிராம் அளவில் 2 முறை மார்டனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட இளைஞர்களுக்கு உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி அளவு போன்றே முதியவர்களுக்கும் எதிர்ப்பு சக்தி உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மார்டனா கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்பதும் உறுதியாகியுள்ளது.

இதனால், கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி பரிசோதனை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு சிறிய அளவில் தலைவலி, உடம்பு வலி உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment