கரகாட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

கரகாட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா

கரகாட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டொக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கரகாட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர், அதிமுகவின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998 இல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad