பாகிஸ்தானில் போலி விமானிகள் - விசாரணைகள் தொடங்கியது - News View

About Us

About Us

Breaking

Friday, September 18, 2020

பாகிஸ்தானில் போலி விமானிகள் - விசாரணைகள் தொடங்கியது

பாகிஸ்தானின் போலி விமானிகள் விவகாரத்தில் மத்திய விசாரணை குழு குற்ற விசாரணையை தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த மே மாதம் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 99 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விசாரணையில் விமானியின் அலட்சியத்தாலேயே விபத்து நடந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் குலாம் சுரூர் கான், நாட்டிலுள்ள மொத்த விமானிகளில் 30 சதவீதம் பேர் போலியான உரிமை வைத்திருப்பதாக கூறினார். இந்த விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பாகிஸ்தான் பொதுத்துறை நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 50 விமானிகள் மற்றும் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் 5 பேர் போலியான சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் மத்திய விசாரணை குழு குற்ற விசாரணையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள 50 விமானிகள் மற்றும் 5 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பிறகு விமானிகள் மற்றும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment