8 லட்சத்து 66 ஆயிரத்து 581 பேர் பலி - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

8 லட்சத்து 66 ஆயிரத்து 581 பேர் பலி - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா

The COVID-19 pandemic in Canada
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகடத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 1,045 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1,218 பேரும், அமெரிக்காவில் 1,067 பேரும் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 61 லட்சத்து 69 ஆயிரத்து 212 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 68 லட்சத்து 72 ஆயிரத்து 247 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 705 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 66 ஆயிரத்து 581 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 1,89,941
பிரேசில் - 1,23,899
இந்தியா - 66,333 
மெக்சிகோ - 65,241
இங்கிலாந்து - 41,514
இத்தாலி - 35,497
பிரான்ஸ் - 30,686
பெரு - 29,259
ஸ்பெயின் - 29,194
ஈரான் - 21,797
கொலம்பியா - 20,348

No comments:

Post a Comment

Post Bottom Ad