கொங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

கொங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில்தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கொங்கோ குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா அருகே தங்க சுரங்கம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் மண்ணுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். 

50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, “தங்க சுரங்கம் இடிந்ததில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். ஒருவரால்கூட வெளியே வரமுடியவில்லை. சுமார் 50 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிகிறது” என்றார்.

No comments:

Post a Comment