எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரச மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இன்று நல்லடக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரச மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இன்று நல்லடக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அவரது பண்ணை வீட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

சென்னை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழ் நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார். 

அவரது அறிவிப்பின்படி எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் இன்று முற்பகல் 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் மரியாதை செலுத்தினார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் அடக்கம் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. அரச மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

மேலும் நேற்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது நுங்கம்பாக்கம் வீட்டில் ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பண்ணை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. 

அதுமட்டுமின்றி தாமரைப்பாக்கம் பண்ணை வீடு காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதும் அங்கு 500 பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் ஏடிஎஸ்பி திருவேங்கடம் தலைமையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment