20 ஆவது திருத்தம் மீதான மனுக்களின் பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

20 ஆவது திருத்தம் மீதான மனுக்களின் பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையானது நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபு முதல் வாசிப்புக்காக கடந்த 22 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் நேற்று வரை மொத்தமாக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அம் மனுக்கள் மீதான பரீசிலனைகள் இன்றைய தினம் ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய மற்றும் நீதிபதிகளான புவனேகா அலுவிஹரே, சிசிரா டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன மற்றும் விஜித் மலல்கோட ஆகிய ஐந்து உயர் நீதிமன்ற நீதியர்கள் முன்னிலையில் இடம்பெற்றது. 

மனுதாரர்கள் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் பல பிரிவுகளின் அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்துவதாகவும், மேலும் 20 ஆவது திருத்த வரைவினை மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment