அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உடனடியாக நிறைவேற்றப்பட மாட்டாது, உலக வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது - அமைச்சர் உதய கம்மன்பில - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உடனடியாக நிறைவேற்றப்பட மாட்டாது, உலக வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது - அமைச்சர் உதய கம்மன்பில

பிரதமர் விலகாவிட்டால், மக்கள் போராட்டம் வெடிக்கும் - கம்பன்பில ~ Jaffna  Muslim
(நா.தனுஜா)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உடனடியாக நிறைவேற்றப்பட மாட்டாது. அதுபற்றி ஆராய்ந்து தர்க்கிப்பதற்கும், உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கும் உரிய கால அவகாசம் வழங்கப்படுவதோடு மூன்று வார காலத்தின் பின்னரே பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாட்டிற்கு ஒரு ஸ்திரமான தலைமைத்துவம் இல்லாத நிலையைத் தோற்றுவித்திருக்கும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்குத் தீர்வு காண்பதற்காகவே 20 ஆவது திருத்தம் விரைவாகக் கொண்டுவரப்படுவதுடன் அதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது என்றும் இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீககாரம் வழங்கியுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது 20 ஆவது திருத்தம் உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படப் போவதில்லை. மாறாக இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர் அதுபற்றி ஆராய்ந்து தர்க்கிப்பதற்கும், அதனை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கும் உரிய கால அவகாசம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து சுமார் மூன்று வார காலத்தின் பின்னரே பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.

தற்போதைய தேர்தல் முறையின் கீழ் எமது அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இந்த தேர்தல் முறையில் எந்தவொரு கட்சியினாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது என்றே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் தெரிவித்தார்.

எனினும் உலக வரலாற்றில் முதற்தடவையாக இத்தேர்தல் முறையின் ஊடாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. நாட்டில் பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாக அமைந்த அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை நீக்குவதுடன் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதற்காகவே மக்கள் எமக்கு அந்த ஆணையை வழங்கினார்கள் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad