கொகா கோலா நிறுவனம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் இணைந்து 16,800 பீ.சீ.ஆர். பரிசோதனை கருவிகள் வழங்கி வைப்பு! - News View

About Us

About Us

Breaking

Thursday, September 3, 2020

கொகா கோலா நிறுவனம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் இணைந்து 16,800 பீ.சீ.ஆர். பரிசோதனை கருவிகள் வழங்கி வைப்பு!

கொகா கோலா நிறுவனம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைந்து 16,800 பீ.சீ.ஆர் பரிசோதனை கருவிகள் மற்றும் 17,000 VTM ஆகியவற்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் 06 வைத்தியசாலைகளுக்கு இந்த பரிசோதனை கருவிகள் வழங்கப்படவுள்ளன. இந்த கருவிகளின் பெறுமதி ரூபாய் 50 மில்லியன் ஆகும்.

கொகா கோலா நிறுவனம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து கொவிட்-19 தொற்றாளர்களுக்காக இதுவரை ரூபாய் 130 மில்லியனை நன்கொடையாக வழங்கியுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் மஹேஷ் குணசேகர, கொகா கோலா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் லக்ஷான் மதுரசிங்க, முகாமைத்துவ பணிப்பாளர் மயன்க் அரோரா, இந்திய மற்றும் தெற்காசிய பிராந்திய முகாமைத்துவ பணிப்பாளர் பங்கஜ் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment