சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஓய்வு வழங்கினார் தோனி - இந்திய சுதந்திர தினத்தில் தனது 39 வயது 39 ஆவது நாளில் விடை கொடுத்தார் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 15, 2020

சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஓய்வு வழங்கினார் தோனி - இந்திய சுதந்திர தினத்தில் தனது 39 வயது 39 ஆவது நாளில் விடை கொடுத்தார்

1478070815_maxresdefault_0 - The Cricket Lounge
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இரு முறைகள் உலகக் கிண்ணத்தை வென்றவருமான விக்கெட் காப்பாளர் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய சுதந்திர தினமான இன்று தனது 39 வயது 39 நாட்களான இன்று (15) பி.ப. 7.29 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான தோனி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள IPL 2020 இல் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இன்று துபாய் நோக்கி புறப்படுவதற்கு முன்பு அவ்வணியின் குறுகிய பயிற்சி முகாமுக்காக தோனி சென்னை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி, கடந்த 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேர்ண் நகரில் இடம்பெற்ற போட்டியைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஜனவரியில், ரி20 மற்றும் ஒரு நாள் அணித் தலைமைத்துவத்தை விராட் கோலியிடம் கையளித்திருந்தார்.

சுமார் 16 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில், தோனி இந்தியாவை அதன் மிக வெற்றிகரமான சகாப்தத்தில் வழிநடத்தியதுடன், 2007 ரி20 உலகக்கிண்ணம், 2011 ஒருநாள் உலகக் கிண்ணம், 2013 சம்பியன்ஸ் கிண்ணம் ஆகியன அவர் தலைமையில் பெற்றுக் கொண்ட மிக முக்கியமாக வெற்றிகளாகும்.

தோனி இறுதியாக விளையாடிய ஒருநாள் போட்டியாக கடந்த 2019 ஜூலை மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக உலகக்கிண்ணத் தொடரில் இடம்பெற்ற போட்டி அமைந்தது. இந்திய அணிக்காக 350 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய தோனி, அப்போட்டியில் 72 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றிருந்தார். ஆயினும் அவர் தன்னை நிரூபிக்க தவறியதாகவே கருத வேண்டி இருந்தது.

350 ஒருநாள் போட்டிகளில் 10,773 ஓட்டங்களை பெற்றுள்ள தோனி, 50.57 எனும் சராசரியை கொண்டுள்ளார். அந்தவகையில் 10,000 ஓட்டங்களை கடந்த 5 ஆவது இந்திய வீரராகவும் தோனி தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் 229 ஆறு ஓட்டங்களை பெற்றுள்ளார் வலது கை துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளர் எம்எஸ் தோனி, இந்தியா அணி வீரர்களில் அதிகூடிய ஆறு ஓட்டங்களை பெற்ற வீரராக தனது பெயரை நிலை நிறுத்தியுள்ளார்

கடந்த 2007ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் இடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்ற எம்எஸ் தோனி 200 போட்டிகளுக்கு தலைமைத்துவம் வழங்கி 55 வீதமான போட்டிகளை வெற்றியீட்டி கொடுத்துள்ளார். 110 வெற்றிகள், 74 தோல்விகள், 5 சமநிலை. 11 முடிவற்ற போட்டிகள் என அது அமைகின்றது.

98 டரி20 போட்டிகளில் விளையாடிய தோனி 1617 ஓட்டங்களை 126.13 எனும் சராசரியில் பெற்றுக் கொண்டுள்ளதோடு, இந்திய ரி20 அணிக்கு தலைமைத்துவம் வழங்கி, 2007 இல் இடம்பெற்ற முதலாவது ரி20 உலகக்கிண்ணத்தை வெற்றியீட்டியிருந்தார். 58.33 எனும் வெற்றி சராசரியை ரி20 போட்டிகளில் கொண்டுள்ள தோனி, 72 போட்டிகளில் 42 வெற்றிகளை ஈட்டிக் கொடுத்துள்ளார்.

இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை ஈட்டிக் கொடுத்த தலைவராக விளங்கும் தோனி, சிறந்த ஆட்டமிழப்புகளை மேற்கொள்ளும் விக்கெட் காப்பாளராக தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.

829 ஆட்டம் அழைப்புகளை 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் மேற்கொண்டுள்ள தோனி 634 பிடி எடுப்புகள், 195 ஸ்டம்பிங்களை மேற்கொண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், மிக வெற்றிகரமான விக்கெட் காப்பாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை தோனி பெறுகின்றார். முதல் இரு இடங்களில் 998 ஆட்டமிழப்புகளுடன் மார்க் பவுச்சர் உம், 905 ஆட்டமிழப்புகளுடன் அடம் கில்கிறிஸ்டும் காணப்படுகின்றனர்.

"நீங்கள் இதுவரை வழங்கிய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. 1929 மணி முதல் நான் ஓய்வு பெற்றவர் (sic) என்று கருதுகிறேன்"
Image may contain: 1 person, text that says "mahi7781 XવN SAHARA 1,366,843 views mahi7781 Thanks Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as as Retired"

No comments:

Post a Comment