பொதுஜன பெரமுன வெற்றிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த திரைமறைவில் சூழ்ச்சி - ஒபரேஷன் வோட்ஸ் என பெயரிட்டுள்ளதாகவும் தகவல் - அம்பலப்படுத்தியது தேசப்பற்று ஐக்கிய தேசிய கட்சி - News View

About Us

About Us

Breaking

Saturday, August 1, 2020

பொதுஜன பெரமுன வெற்றிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த திரைமறைவில் சூழ்ச்சி - ஒபரேஷன் வோட்ஸ் என பெயரிட்டுள்ளதாகவும் தகவல் - அம்பலப்படுத்தியது தேசப்பற்று ஐக்கிய தேசிய கட்சி

பொதுத் தேர்தலில் படுதோல்வியை சந்திக்கவுள்ள எதிர்க்கட்சிகள் தமது தோல்வியை மூடிமறைத்துக் கொள்ளவும் பொதுஜன பெரமுனவின் மகத்தான வெற்றியை தடுக்கவும் வெற்றிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவும் சதித்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசப்பற்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டை நேசிக்கும் தேசப்பற்று ஐக்கிய தேசியக் கட்சி (தேசப்பிரேமி எக்சத் ஜாதிக்க பக்ஷய) நேற்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திசைதிருப்பிய சக்திகள் மீண்டும் தமது பணிகளை சூட்சமமாக ஆரம்பித்துள்ளன. குருணாகலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொள்ளவுள்ள விருப்பு வாக்குளை குறைப்பதற்காக அடுத்துவரும் நாட்களில் சேறு பூசம் திட்டங்கள் சிலவற்றை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளன.

சர்வதேச நிதியுதவியுடன் இயங்கும் அரச சார்ப்பற்ற சில நிறுவனங்கள் இந்தப் பணியை முன்னெடுத்து வருகின்றன. பல்வேறு கட்டுக்கதைகளையும் பல்வேறு கருத்துகளையும் இவர்கள் மக்கள் மத்தியில் பரப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோன்று சமூக ஊடகங்களூடாக சில காணொளிகளையும் அவர்கள் பரப்பவுள்ளனர். அவற்றில் சிலவற்றை தற்போது பரப்பியும் வருகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் 89 சதவீதமான விருப்பு வாக்குளை மஹிந்த ராஜபக்ச பெற்றிருந்தார். இதனை குறைத்து பொதுஜன பெரமுனவில் பிரச்சினைகளை உருவாக்குவதே இவர்களது நோக்கமாகும்.

கொவிட் 19 வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில்தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இது இலங்கையில் நடைபெற்றுள்ள ஏனைய தேர்தல்களையும்விட மாறுபட்ட தேர்தலாகும்.

சர்வதேச பார்வையாளர்களும் வாக்குச் சாவடிகளில் இருக்கும் நிலையில், வாக்குச் சாவடிகளில் அமைதியின்மையை ஏற்படுத்த இவர்கள் திட்டம் வகுத்துள்ளதுடன், வாக்களிப்பதற்காக அதிக நேரத்தை பயன்படுத்தி வாக்காளர்களிடையே குழப்பகரமான நிலையை தோற்றுவிக்கவுள்ளனர்.

வாக்குகளை அளிக்க முடியாது போனவர்களை இணைத்துக்கொண்டு வாக்குக் சாவடிகள் முன்னிலையிலும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கருகிலும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தத் திட்டம் தீட்டியுள்ளனர்.

அத்துடன், பொதுஜன பெரமுனவின் வெற்றியை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் இவர்கள் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கு “ஒபரேஷன் வோட்ஸ்”(Oparation Votes) என இவர்கள் பெயர் சூட்டியுள்ளதாகவும் தேபற்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment