இலங்கையுடனான உறவை உயர் மட்டத்திற்கு கொண்டுசெல்ல சீனா முயற்சி - News View

Breaking

Post Top Ad

Saturday, August 8, 2020

இலங்கையுடனான உறவை உயர் மட்டத்திற்கு கொண்டுசெல்ல சீனா முயற்சி

இலங்கையுடனான உறவை உயர் ...
இலங்கையுடனான இரு தரப்பு உறவை உயர் மட்டத்திற்கு உயர்த்த சீனா முயல்வதாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சீனா, வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், இரு தரப்பு உறவுகளை அதிக வளர்ச்சியுடன் உயர்த்துவதற்கான தனது ஆதரவையும் உறுதிப்படுத்தியது.

இலங்கையில் உள்ள சீனத் தூதரக அதிகாரிகள் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் வாழ்த்து கடிதத்தையும் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது ஹம்பாந்தோட்டை துறைமுக நகரத்தின் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களில் ஒத்துழைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad