சிறு வயது திருமணங்கள் நாட்டிற்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்கும் நல்லதல்ல - பெண்கள் அமைப்புகள் கலந்துரையாடியதாக நீதியமைச்சர் தெரிவிக்கிறார் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 30, 2020

சிறு வயது திருமணங்கள் நாட்டிற்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்கும் நல்லதல்ல - பெண்கள் அமைப்புகள் கலந்துரையாடியதாக நீதியமைச்சர் தெரிவிக்கிறார்

முஸ்லிம் சமூகத்தின் சிறு வயதுத் திருமணங்களைத் தடுக்க வேண்டும். அது நாட்டிற்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்கும் நல்லதல்ல என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கண்டியில் தெரிவித்துள்ளார். 

கண்டிக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அவர் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் மற்றும் ஏனைய பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் இது விடயமாக கலந்துரையாடியுள்ளதாகவும் சிறு வயதுத் திருமணங்களை தடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது என்றும் கூறினார். 

நீதித்துறை சுயாதீனமாகவும் அனைவருக்கும் சமமாக இருப்பது அவசியமாகும் நீதித்துறையின் செயல்திறனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

நாட்டின் நீண்ட கால நன்மைக்காக முடிவுகள் எடுக்கப்படும்போது அனைவரும் திருப்திடைவதில்லை என்று தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா

No comments:

Post a Comment

Post Bottom Ad