அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஏற்க வேண்டும் - ஹெக்ட்டர் அப்புஹாமி - News View

Breaking

Post Top Ad

Sunday, August 30, 2020

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஏற்க வேண்டும் - ஹெக்ட்டர் அப்புஹாமி

பிரதமர் வேட்பாளர் விடயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் : ஹெக்டர் அப்புஹாமி -  News View
(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டாலும், அவர் சிறந்த முறையில் செயற்படுவாராயின் அவர்களுடன் கூட்டணி அமைத்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்ட்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியில் எஞ்சியுள்ள சில உறுப்பினர்களை தங்களுடன் இணைந்துக் கொள்ளவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவதற்கு வாய்ப்பை வழங்கிய பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவமே ஏற்க வேண்டும். கட்சிக்குள் செய்ய வேண்டியிருந்த மாற்றங்களை உரிய காலத்தில் செய்யாததன் விளைவாகவே நாங்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

அத்தோடு, பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட்டிருந்தோம் என்றால் அரசாங்கத்திற்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருக்கும். நாங்கள் தனித்து போட்டியிட்டதன் காரணமாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவடைந்துள்ளது. 

நாங்கள் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பொறுப்பை அப்போது கட்சியின் பிரதித் தலைவராக செயற்பட்ட சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், அது தொடர்பில் கட்சியின் தலைவர் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அதனாலேயே சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியுள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் ஒரு ஆசனங்களை கூட வெற்றிகொள்ள முடியாமல் போயுள்ளமை தொடர்பில் எமக்கு கவலையளிக்கின்றது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad