தெதுறு ஓயாவில் நீராடச் சென்றவர் மாயம் - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

தெதுறு ஓயாவில் நீராடச் சென்றவர் மாயம்

நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மாணவன்
சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெதுறு ஓயா நீர் நிலையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று (29) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பொத்துஹெர, இந்துல்கொடகந்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என, பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகளுடன் கடற்படையினரும், மீனவர்களும் கூட்டாக இணைந்து, நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(கற்பிட்டி தினகரன் விசேட நிருபர் – ரஸ்மின்)

No comments:

Post a Comment

Post Bottom Ad