வாள் வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

வாள் வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ள இருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடினர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் மானிப்பாயில் வைத்து இன்று கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவருக்கும் எதிராக ஆவா என்று பொலிஸாரால் விழிக்கப்படும் வாள் வெட்டு வன்முறைக் கும்பலின் வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அந்த வழக்குகளில் அவர்கள் இருவரும் ஒழுங்காக முற்படுவதால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மானிப்பாய் பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட ஆவா வினோதன் உள்ளிட்ட ஆறு பேரும் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் மானிப்பாய் பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad