தலைமைத்துவத்திலிருந்து விலகினார் டியூ. குணசேகர! - News View

Breaking

Post Top Ad

Sunday, August 30, 2020

தலைமைத்துவத்திலிருந்து விலகினார் டியூ. குணசேகர!

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டது - டியூ. குணசேகர - News View
(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து முன்னாள் அமைச்சர் டியூ. குணசேக இராஜிநாமா செய்துள்ளார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். கட்சியின் செயற்குழுவிற்கு இது தொடர்பில் அறிவித்ததன் பின்னரே இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார்.

டியூ. குணசேகரவின் இராஜிநாமாவை அடுத்து கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு விஷேட வைத்திய நிபுணர் ஜி. வீரசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயற்குழு அந்த பரிந்துரையை ஏகமனதாக அங்கீகரித்துள்ளதாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவமான பிரதம செயலாளர் பதவிக்கு ஜீ. வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad