தமிழ் இளைஞர்களை தூண்டிவிட விக்னேஷ்வரன் முயல்கிறார் - அமைச்சர் சரத் வீரசேகர - News View

Breaking

Post Top Ad

Thursday, August 27, 2020

தமிழ் இளைஞர்களை தூண்டிவிட விக்னேஷ்வரன் முயல்கிறார் - அமைச்சர் சரத் வீரசேகர

ரியர்-அட்மிரல்-சரத்-வீரசேகர - Today Jaffna News - Jaffna Breaking News 24x7
தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் இடைவெளியை ஏற்படுத்தவும் தமிழ் இளைஞர்களை தூண்டிவிடவும் சீ.வி. விக்னேஷ்வரன் முயல்வதாகவும் அவரின் கருத்துக்கள் தொடர்பில் விளக்கம் கோரப்பட வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தெற்கில் 60 வீதமான தமிழ் மக்கள் வாழ்க்கையில் அவர் வடக்கிற்கு சுயநிர்ணய உரிமை கோருவதாக குறிப்பிட்ட அவர் ஒரு மொழியை விட இன்னொரு மொழி உயர்வாக முடியாதென்றும் தெரிவித்தார். 

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, தேசிய பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் மீண்டும் யுத்தத்தை உருவாக்க முயல்கின்றனர். சிங்கள, தமிழ் முஸ்லிம்களிடையே குரோதத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். 

லொலிபப் சாப்பிட கோரும் குழந்தையை போன்று சுயநிர்ணய உரிமை பற்றி சீ.வி. விக்கினேஷ்வரன் பேசுகிறார். தெற்கில் 60 வீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களை மறந்து இவர் கோரிக்கை முன்வைக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad