உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கல்வி அமைச்சர் பொறுப்பு கூற வேண்டியவரல்ல - அகில விராஜ் காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Monday, August 31, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கல்வி அமைச்சர் பொறுப்பு கூற வேண்டியவரல்ல - அகில விராஜ் காரியவசம்

05.07.18- ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு முற்றாக தோல்வி - கல்வி அமைச்சர் அகிலவிராஜ்  காரியவசம்.. - Karaitivunews.com
(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்பதை ஜனாதிபதி ஆணைக்குழு தெளிவுபடுத்தும். கல்வி அமைச்சர் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவரல்ல என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களுக்கான உள்ளடக்கங்கள், மத புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நூல்கள் தயாரிக்கப்படும் போது எனது தலையீடு குறித்து வினவப்பட்டது. இவற்றை பேராசிரியர்கள், கலாநிதிகள் ஆகியோரே தயாரிக்கின்றனர். இதில் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் தலையிடுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment