எம்.பிக்களுக்கான இலவச வாகன பத்திரங்களை நிறுத்தி, பொதுச் சேவை அபிவிருத்தி செய்யப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

எம்.பிக்களுக்கான இலவச வாகன பத்திரங்களை நிறுத்தி, பொதுச் சேவை அபிவிருத்தி செய்யப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர

சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் ...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நிறுத்தி, பொது போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் நேற்று (28) இடம்பெற்ற பொதுக் கூட்டத்திலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், எமது நாட்டில் தேசிய வருமானத்திலிருந்து பில்லியன் கணக்கான ரூபா நிதி, பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. இதன் காரணமாக பாதிக்கப்படுவது நாட்டு மக்களே என தெரிவித்தார்.

போக்குவரத்தை கவர்ச்சிகரமான சேவையாக மேம்படுத்துவதன் மூலம், செலவுகளை கட்டுப்படுத்த முடியும் எனவும், அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு, பஸ் வண்டிகளில் உரத்த இசை நிறுத்தப்பட்டுள்ளதோடு, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என்பதோடு, ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் ஏற்றிக்கொண்டு செல்வது பொதுவான சட்டமாக மாற்றப்படும் என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment