பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து நல்ல தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் - பொறியியலாளர் ஷிப்லி பாறூக் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து நல்ல தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் - பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

முசலி, மரிச்சுக்கட்டி பிரச்சினை ...
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து நல்ல தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படும் தலைவர்கள் ஊழல் மோசடிகளற்றவர்களாக சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தாதவர்களாக, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் 4ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும் கூறுகையில், தற்போது சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சமான ஓர் சூழல் உள்ளது. அமையப்போகும் புதிய பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அதன் மூலம் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதில் சிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது.

ஆனால் அவ்வாறான நிலைமை ஏற்படாமல் அமையப்போகும் அரசாங்கம் சகல இன மக்களும் அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழக்கூடிய ஓர் சூழலை உருவாக்க வேண்டும். அதேநேரம் சிறந்த பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது.

இவ்வாறன நிலையில் முஸ்லிம் மக்கள் இம்முறை தமது வாக்கினை சிந்தித்து சரியானவர்களுக்கு வழங்க வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளற்ற சமூக பிரச்சினைகளை தோற்றுவிக்காதவர்களாக பார்த்து அவர்களுக்கு தமது வாக்கினை வழங்க வேண்டும்.

அவ்வாறானவர்களை தெரிவு செய்யும் போதே எதிர்காலத்தில் சிறந்த சமூகம் ஒன்றை கட்டியெழுப்பவும், எதிர்கால சந்ததியினருக்கு சிறப்பான வாழ்க்கையையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றார்.

காத்தான்குடி நிருபர்

No comments:

Post a Comment