ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தின் அடையாளம், நாடு சுபீட்சம் பெற பிரார்த்திப்போம் - முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹரீஸ் - News View

About Us

About Us

Breaking

Friday, July 31, 2020

ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தின் அடையாளம், நாடு சுபீட்சம் பெற பிரார்த்திப்போம் - முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹரீஸ்

பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு ...
தியாகம், அர்ப்பணிப்பு நிறைந்த சமாதானம் மிக்க மார்க்கமான இஸ்லாத்தின் கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்றாக இருந்துவரும் புனிதமிகு ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளர்.

"அனைவருக்கும் ஈத்துல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்".

உலகை உலுக்கிப்போட்ட கோவிட்-19 காரணமாக எமது நாட்டில் வாழும் முஸ்லிம்களாகிய நாங்கள் இம்முறை புனித ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையை அடைந்தோம். அதனால் நாங்கள் அடைந்த வேதனை மிக அதிகமாக இருந்தது.

இன்ஸா அல்லாஹ் அடுத்த வருடம் எங்களுடை நாட்டிலிருந்து யார் யாரெல்லாம் புனித ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொள்ள நிய்யத்து வைத்துள்ளார்களோ அவர்கள் எல்லோருடைய நிய்யத்துக்களையும் வல்ல நாயகன் அல்லாஹ் கபூல் செய்ய இந்த நன்னாளில் இருக்கரமேந்தி பிரார்த்திக்கின்றேன்.

எமது நாடு மிக முக்கிய கட்டத்தில் இன்றைய நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறது. இன்னும் சில தினங்களில் நாங்கள் வாக்களிக்க தயாராக உள்ளோம். எங்களின் வாக்குகள் மூலம் இந்த நாட்டில் நாங்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ சரியான எண்ணத்தின் பால் எமது புள்ளடியை இடுவோம்.

இன்றைய ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தின் அடையாளம். அவ்வாறான தியாகங்கள் கடந்து எமது நாடு சுபீட்சம் பெற எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போம் எனவும் அவ்வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment