மொட்டு கட்சியின் வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை - News View

About Us

About Us

Breaking

Friday, July 31, 2020

மொட்டு கட்சியின் வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை

மொட்டு வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை-SLPP Candidate Former MP Premalal Jayasekera Sentence to Death
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது, ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு அமைய, முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட 3 பேருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, இன்றையதினம் (31) அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரேமலால் ஜயசேகர, இம்முறை பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுகிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் கூட்ட ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்த வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர், 'தொடங்கொட சுசில் பெரேரா' என அழைக்கப்படும் ஷாந்த தொடங்கொட என்பவராவார். கே. கருணாதாஸ வீரசிங்க மற்றும் எம். இல்ஷான் என்பவர்களே இச்சம்பவத்தில் காயமடைந்த ஏனையவர்களாவர்.

No comments:

Post a Comment