எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்படவும் - கண்டி மாவட்ட புத்தி ஜீவிகள் ஒன்றியம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்படவும் - கண்டி மாவட்ட புத்தி ஜீவிகள் ஒன்றியம்

பொதுத் தேர்தல் தொடர்பிலான சுகாதார ...
(ஐ.ஏ. காதிர் கான்)

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒட்டுமொத்த 170,000 முஸ்லிம் வாக்காளர்களும் எதிர்த்து நின்று வாக்களித்தாலும், இவ்வெற்றியைத் தடுக்க முடியாது என்பதை, தேர்தல் நிலைவரம் பறை சாற்றிக்கொண்டிருக்கின்றது. எனவே, ஆட்சியில் அதிகாரத்துடன் இருக்கின்ற அரசாங்கத்துடன் இணைந்து சென்று எமது எதிர்காலத்தை வளப்படுத்திக்கொள்வதா? அல்லது தெரிந்து தெரிந்து எதிர்க்கட்சிக்கு எமது வாக்குகள் அனைத்தையும் தாரை வார்த்து மீண்டும் ஒருமுறை இனவாதிகளின் விமர்சனங்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் எமது சமூகத்தை ஆளாக்குவதா? என்பதனை முஸ்லிம் மக்கள் சிந்தித்துச் செயற்படுமாறு, கண்டி மாவட்ட புத்தி ஜீவிகள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இது முஸ்லிம் சமூகம் தொடர்பான தூர நோக்குடன் மேற்கொண்ட சிந்தனையில் உதித்த ஆதங்கமாகும். கணிசமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தீர்மானம் மிக்க ஒரு பொதுத் தேர்தலை நாம் முன் நோக்கியிருக்கின்றோம். அண்மைக்காலமாக நாம் இழந்திருக்கும் நிம்மதியையும், அமைதியையும் மீளப் பெற்றெடுப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக இதை நாம் கருதலாம்.

கடந்த கால அனுபவங்களையும், புள்ளி விபரங்களையும் வைத்து இத் தேர்தல் களம் தொடர்பாக அலசி ஆராய்வது பொருத்தமாகும்.

கண்டி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை : 1,300,000

சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கை : 1,020,000
முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை : 170,000
தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை : 110,000
வாக்களிப்பு விகிதாசாரம்
சிங்கள மக்களின் வாக்களிப்பு வீதம் 90மூ : 918,000
முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு வீதம் 60மூ : 102,000
தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் 75மூ : 82,500
மொத்த வாக்களிப்பு : 1,102,500

தற்போது இவ் வாக்குகளுக்கான வேட்டை ஆரம்பமாகிவிட்டது. இதில் முஸ்லிம்களின் நிலைமையை சிந்திக்கும் பொழுது கவலையாகவும் உள்ளது. பிரதான கட்சிகளிலிருந்து 6 வேட்பாளர்களும், ஒரு முஸ்லிம் சுயேட்சைக் குழுவும் இந்த 102,000 வாக்குகளைப் பங்கு போடும்போது, முஸ்லிம் பிரதிநிதித்துவம் சவாலுக்குள்ளாகின்றது. சுயேட்சைக் குழுவொன்றிலிருந்து பிரதிநிதித்துவம் பெறுவதற்கு மொத்த வாக்குகளில் 5 வீதத்தினைப் பெற வேண்டும். இது சுமார் (1102500 ஓ 5 ஃ 100) 55,125 ஆகும். இந்த எண்ணிக்கையை ஒரு சுயேட்சைக் குழுவோ அல்லது இந்த எண்ணிக்கைக்குப் பொருந்துகின்ற ஒரு கட்சியோ பெற முடியுமா? இது சாத்தியமாகுமா? முஸ்லிம் வாக்காளர்களே! சிந்தியுங்கள். இறுதியில் இக் குழுவுக்கு அளிக்கும் வாக்குகள் எம்மை இனவாதிகள் எனக் காட்டிக் கொடுக்குமல்லவா?

1988 ஆம் ஆண்டு முதல் எமது சமூகம் சார்பாக உருவாகிய முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தூர நோக்குடன் சிந்தித்ததன் காரணமாகவே, பெரும்பான்மைச் சமூகத்தினருடன் சம உரிமைகளுடனும் பிரத்தியேக சலுகைகளுடனும் வாழக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், கலாநிதி ஏ.சீ.எஸ். ஹமீத் போன்றவர்களது தன்னலமற்ற சேவைகள் இன்றும் பலராலும் பேசப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகின்றது.

இவ்வரிசையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் நெருங்கிய தொடர்பிணையும் நன் மதிப்பையும் வென்ற அல்ஹாஜ் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களின் அரசியல் பிரவேசமும், முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாகும். கிடைத்திருக்கும் இவ்வறிய சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி செயற்படுவோமாயின், சமூகம் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் பல பிரச்சினைகளுக்கு ஒரு முடிவாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆகவே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டம் சார்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னத்தில் 7 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள அல்ஹாஜ் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களை வெற்றிபெறச் செய்து ஒளிமயமிக்க ஒரு எதிர்காலத்திற்கு வித்திடுவோம்.

No comments:

Post a Comment