வீட்டில் இருப்பவர்கள் சாராயதவறணையை நடாத்துகின்றார்கள், அங்கு விபச்சாரமும் நடக்கின்றது - சிவாஜிலிங்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 27, 2020

வீட்டில் இருப்பவர்கள் சாராயதவறணையை நடாத்துகின்றார்கள், அங்கு விபச்சாரமும் நடக்கின்றது - சிவாஜிலிங்கம்

வீட்டில் விபச்சாரம் நடக்கின்றது - வேட்பாளர்களை கிழித்து தொங்கவிட்ட சிவாஜி
வீட்டில் இருப்பவர்கள் சாராயதவறணையை நடாத்துகின்றார்கள். அங்கு விபச்சாரமும் நடக்கின்றது. வீட்டையும் உடைத்து இவர்களை ஊரை விட்டே துரத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம. கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தலைவர் கைகாட்டிய கூட்டமைப்பு அதனால் வாக்களிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் ஜயசிக்குறு நடவடிக்கையில் பங்கெடுத்த கருணாவை தலைவர் பிராபகரன் அன்று பாராட்டியிருந்தார். அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. அப்படியானால் தலைவர் கைகாட்டிய கருணாவை நீங்களும் நாங்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா. அதுபோலேவே கூட்டமைப்பும் வீட்டுச்சின்னமும்.

செல்வம் அடைக்கலநாதன் சொல்கிறார் வீட்டை காப்பாற்ற வேண்டுமாம். தேர்தல் தோல்வியுடன் இந்தியா சென்ற அவரை வசந்தன் எம்பி இறந்த பின்னர் நாம் போய் அழைத்து வந்தோம். இன்று 20 வருடங்கள் இராசா போல பதவியில் இருக்கிறார்.

இம்முறை மக்கள் வழங்கும் தீர்ப்பினை நீங்கள் பார்பீர்கள்.இந்த வீட்டில் சாராயத்தவறணை நடந்து கொண்டிருக்கிறது. இங்கே இருக்கின்ற வேட்பாளர்கள் சாராய தவறணையை நடாத்தி கொண்டிருக்கின்றார்கள். அங்கே விபச்சாரம் நடக்கின்றது. அப்படியானால் வீட்டையும் உடைத்து இவர்களை ஊரை விட்டே ஓட ஓட துரத்த வேண்டும்.

தமிழரசு கட்சியை விட்டு நீங்கள் வரமாட்டீர்கள் என்று டெலோ கூட்டத்தில் சண்டை இடுவார் வினோநோகராதலிங்கம். அவரிடம் கேட்கிறேன் பழசுகளை மறந்துவிட்டீர்களா. அத்துடன் விட்டு விடுகின்றேன் ஏனெனில் இம்முறையும் நீங்கள் தோல்விதான். அதனால் உங்களைப் பெரிதாக அடிக்க விரும்பவில்லை.

மாவையுடன் 45 வருடங்கள் அரசியலில் ஈடுபட்டவன். தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர் ஆனால் முதுகெலும்பில்லாதவர். டம்மியான பொம்மை அவர். நடைமுறையில் தமிழரசுகட்சியின் தலைவராகவும், கூட்டமைப்பின் தலைவராகவும் சுமந்திரனே செயற்படுகின்றார். அது தொடர்பில் வாய்திறக்க அங்கத்துவ கட்சிகள் தயாரில்லை. ஏனெனில் இவர்களில் பலர் சுமந்திரனிடம் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் கடமைப்பட்டிருக்கின்றார்கள். மறுக்கமுடியுமா அவர்களால்.

சின்னப்பொடியன் தம்பி மயூரன் சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இன்று சாள்ஸ் நிர்மலநாதனுடன் கூட்டு சேருவதற்காக சமரசமாகின்றார். அதுபோலவே சிவமோகனும் தமிழரகட்சியில் சேர்ந்தார். இந்த துரோகங்கள் எல்லாம் எங்கே போய் முடியப் போகின்றது. இவர்களிற்கு மக்கள் தகுந்த பாடத்தினை வழங்க வேண்டும்.

சுமந்திரனின் வடமராட்சி வீட்டில் ரணிலுக்கு இளநீரும் நுங்கும் வெட்டிக் கொடுத்தனர்.. ஆனால் மக்களுக்கு எதனை பெற்றுக் கொடுத்தனர். மற்றயவர் மகளின் பிறந்த தினத்துக்கு ஐனாதிபதியை அழைத்து கேக் வெட்டினார். இதுபோல ஊரவர் வீட்டு பிள்ளைகளை நினைத்தார்களா.

அத்துடன் றிசாட் பதியூதின் கோரப்பிடியிற்குள்ளே வன்னி சிக்கியிருக்கின்றது. அவருக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாக்களித்துள்ளார்கள். இனிமேல் ஒருவரது வாக்குகூட றிசாட் அணிக்கு வழங்கப்படக்கூடாது.

ஐயா மஸ்தான் கூட படுகொலையாளர்களான, கொலைகாற கும்பலுக்கு ஆதரவு செய்கிறார். நீங்கள் செய்யும் மாட்டுவியாபாரமும் கொலைதான். எனவே ஓய்வுபெற்று விட்டு மாட்டிறைச்சியை கொழும்புக்கு அனுப்பும் வழியை பாருங்கள். அரசியலில் உங்களுக்கு இடமில்லை.

சாதாரண மக்கள் தான் அப்படி என்றால் சில முன்னாள் போராளிகளும் கூட!! அவர்கள் குறுக்கால வந்தார்களோ நேராக வந்தார்களோ தெரியவில்லை. நாம் போராளிகளையும், போராட்டத்தையும் மதிக்கிறோம். ஆனால் நீங்கள் கோட்டாவுடன் நிக்கிறீர்கள், மஹிந்தவுடன் நீக்கிறீர்கள். தற்போது கூட்டமைப்புடன் நிற்கீறீர்கள் சரியான இடத்தில்தான் நிற்கீறீர்கள் இரண்டுமே ஒன்றுதான்.

எமது மக்கள் நெருக்கடியான நிலையில் தற்போது இருக்கிறார்கள். எனவே சரணாகதி அரசியலை நாம் செய்யமுடியாது. இந்தநிலையில் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் விளக்குப்பிடித்துக்கொண்டுபோய் கிணற்றுக்குள் விழுவதாகவே அர்த்தம்.

இன்று திருகோணமலையில் சம்பந்தர் தோற்கடிக்கப்பட்டு எமது வேட்பாளரான ரூபன் வெற்றிபெறுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பந்தர் தலைமையில் இருக்கின்ற இந்த அணி அலிபாபாவும் நாற்பது திருடர்களைப்போலவே வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளனர். எனவே தமிழ் மக்கள் தெளிவானதீர்ப்பினை வழங்கவேண்டும். என்றார்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment