சமூகத்தை காட்டிக் கொடுத்தவர்களே இன்று பாதுகாப்பில்லையென கூக்குரல் - வேடிக்கையாக உள்ளதென்கிறார் சட்டத்தரணி அலி சப்ரி - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

சமூகத்தை காட்டிக் கொடுத்தவர்களே இன்று பாதுகாப்பில்லையென கூக்குரல் - வேடிக்கையாக உள்ளதென்கிறார் சட்டத்தரணி அலி சப்ரி

ஜனாதிபதி இனவாதம் தலைதூக்க ...
முஸ்லிம் சமுதாயத்தை காட்டிக் கொடுத்தவர்களே இன்று சிறுபான்மைக்கு பாதுகாப்பில்லையென கூக்குரல் விடுகின்றனர். இவ்வாறுதான் கடந்த கால முஸ்லிம் உறுப்பினர்கள் செயற்பட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.சுபியானை ஆதரித்து அவரது தம்பலகாமம் இல்லத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் உரையாற்றுகையில் எமது சமூகத்தை பாதுகாக்க பொதுஜன பெரமுனவுடன் இணையுங்கள். ஆளும் அரசாங்கம் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண முடியும். பிரதேச அபிவிருத்திகளையும் காண முடியும். 

1947 க்கு பிறகு முஸ்லிம் ஒருவர் அமைச்சரவை அமைச்சராக இருக்கவில்லையென ஒருவர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இது உண்மைதான். ஆளும் அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை. இருக்க வேண்டும், இதனை வைத்து அரசாங்கத்துக்கு இம்முறை வாக்களிக்க வேண்டும்.

நாட்டில் யுத்தத்தையும் பயங்கரவாதமற்ற நாடாகவும் மாற்றியவரே மஹிந்த ராஜபக்சதான். அவர் மூவின மக்களையும் சமமாக வழிநடத்தி வருகிறார். கடந்த காலங்களில் எம்மை அநாதரவாக ஆக்கியவர்களே இனவாதத்தை கூறி வாக்கு கேட்கின்றனர்.

மூவின மக்களையும் சமமாக மதித்து நடப்பவர் ஜனாதிபதி, கொவிட்-19 ஊரடங்கு காலத்தில் பேருவளை முஸ்லிம் பிரதேசம் முடக்கப்பட்ட போது ரமழான் காலத்தில் ஸஹர், இப்தாருக்காக பல உதவிகளை அன்றைய சங்கடமான காலத்தில் வழங்கி முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்தினார்.

இனவாத அரசியலுக்கான முற்றுப் புள்ளியை வைத்தார். இம்முறையும் பொதுஜன பெரமுன 134 க்கு மேற்பட்ட ஆசனங்களை பெற்று பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும். பிரதமரும் அமைச்சரவையும் ஒட்டு மொத்தமாக அரசாங்கத்தையே சாரும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad