முஸ்லிம்கள் ஹக்கீம், ரிஷாதிடம் இனிமேலும் ஏமாற மாட்டார்கள், அவர்கள் சிறந்த மாற்றமொன்றினையே எதிர்பார்க்கின்றார்கள் - கம்பளையில் வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, July 27, 2020

முஸ்லிம்கள் ஹக்கீம், ரிஷாதிடம் இனிமேலும் ஏமாற மாட்டார்கள், அவர்கள் சிறந்த மாற்றமொன்றினையே எதிர்பார்க்கின்றார்கள் - கம்பளையில் வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்

முஸ்லிம் மக்கள் பழைய பாதைகளை மறந்து ...
முஸ்லிம் மக்கள் ரவூப் ஹக்கீமிடமோ ரிஷாதிடமோ அல்லது வேறு முஸ்லிம் தலைமைகளிடமோ இனிமேலும் ஏமாற மாட்டார்கள். முஸ்லிம் மக்கள் தற்போது சிறந்த மாற்றமொன்றினையே விரும்புகின்றார்கள். சிறந்த தலைமைத்துவம் ஒன்றே அவர்களின் எதிர்பார்ப்பாகும் என்று, கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

கம்பளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறியதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பாரிய அபிவருத்தித் திட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றன. 

கண்டி மாவட்டத்திலும் தற்போது இடம்பெற்று வருவதுடன், தேர்தலுக்குப் பின்னரும் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் அதிகமான வேலைவாய்புக்கள் முஸ்லிம்களுக்கும் கிடைக்கும். அதற்கான வாக்குறுதிகளை என்னால் வழங்க முடியும். வேறு எவரும் செய்யாத வேலைத் திட்டங்களை திடமாக ஜனாதிபதியினாhல் நிறைவேற்ற முடியும். மிக விரைவில் கண்டி மீண்டெழும். வேலை வாய்புக்கள் உருவாகும். சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள் கண்டியில் சுயமாக வாழக்கூடிய சூழல் உருவாகும்.

முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றி வருகின்றார்கள் என்பதை நாம் பார்க்கின்றோம். ஹக்கீமோ ரிஷாதோ முஸ்லிம்களுக்கு செய்தது என்ன என்ற கேள்வியையே நாமும் எழுப்புகின்றோம். முஸ்லிம்கள் என்ற ரீதியில் இந்த உண்மையை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் எங்கள் மக்கள். உங்களை நாம் பொறுப்பேற்க வேண்டும் என்பதையே கூறுகின்றோம். 

முஸ்லிம்களை நாம் நேசிக்கின்றோம். ஜனாதிபதியும் அவ்வாறே முஸ்லிம்களை நேசிக்கின்றார். கடந்தகால கண்டி திகனையில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களை சற்று எண்ணிப்பாருங்கள். இந்த அனுபவங்களை யாரும் மறக்க மாட்டார்கள். ஆனால், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறமாட்டாது. இதனை நாம் மாற்றியமைப்போம்.

மக்கள் இன்று எம்முடனையே இருக்கின்றார்கள். சிங்கள, தமிழ்;, முஸ்லிம்களுக்கு இடையிலான உறவுப்பாலங்கள் பலமடைந்துள்ளன. முஸ்லிம் சிங்களவர்களுக்குமிடையிலான தொடர்புகள் இன்று வலுவடைந்துள்ளதையும் பார்க்கின்றோம். இவ்வாறான சிறந்த சுமுக நிலை, ஜனாதிபதி பதவியேற்று எட்டு மாதங்களில் உருவாகியுள்ளதையே இதன் மூலம் நாம் அறிகின்றோம் என்றார்.

ஐ.ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment