தேர்தல் பாதுகாப்பில் 75 ஆயிரம் பொலிஸார், 9 ஆயிரம் சிவில் பாதுகாப்புப் படையினர் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 30, 2020

தேர்தல் பாதுகாப்பில் 75 ஆயிரம் பொலிஸார், 9 ஆயிரம் சிவில் பாதுகாப்புப் படையினர்

ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் என 84 ஆயிரம் பேரை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் பொலிஸாரையும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் தேர்தல் காலத்தில் பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 5000ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் எந்தவொரு வன்முறை சம்பவமும் இதுவரை பதிவாகவில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணித்தியாலங்களில் 164 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment