6 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஆளும் கட்சியின் திட்டம் என்ன ? - ரணில் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Thursday, July 30, 2020

6 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஆளும் கட்சியின் திட்டம் என்ன ? - ரணில் கேள்வி

சர்வதேச அமைப்புக்களிடமிருந்து ...
(எம்.மனோசித்ரா)

இலங்கையின் பொருளாதாரத்தை மீள்சீரமைக்க தேவையான 6 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்ளும் திட்டங்கள் அரசாங்கத்திடம் கிடையாது. கடனாக பெற்றுக் கொண்டாலும் அரசின் பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தின் இயலாமையினால் மற்றுமொரு நெருக்கடியை நோக்கியே நாடு செல்லும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தேர்தலொன்றை அருகில் வைத்துக்கொண்டு நாட்டிற்காக எமது திட்டங்களையே நாம் முன்வைக்க வேண்டும். இதனை தெளிவாக கூறும்போது அதற்குறிய பலன்கள் மக்கள் எமக்களிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இன்று கட்சி உறுப்பினர்களை முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், நாட்டில் 10 இலட்சம் தொழில் வாய்ப்புகள் பாதிப்படைந்துள்ளன. நாள் உழைப்பை நம்பி வாழ்ந்த மக்களின் நிலை மிகவும் மோசமானதாகவே அமைந்துள்ளது. உழைக்கும் மக்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்படுவதில்லை. அரைவாசியையே வழங்குகின்றனர். 

இந்த நிலைமையை மாற்ற வேண்டுமாயின் இலங்கைக்கு 6 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது. ஆனால் அத்தொகையை பெற்றுக் கொள்ளும் திட்டங்கள் அரசாங்கத்திடம் கிடையாது. கடனை பெற்றுக் கொண்டாலும் பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தின் அரசின் இயலாமை வெளிப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment