மத்திய கலாசார நிதியத்தில் மோசடி, டொலர் கணக்கிலும் முறைகேடு அம்பலம் - 142 பக்கங்கள் கொண்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

மத்திய கலாசார நிதியத்தில் மோசடி, டொலர் கணக்கிலும் முறைகேடு அம்பலம் - 142 பக்கங்கள் கொண்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

2016 முதல் 2019 வரையான காலப்பகுதியில் மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் முறைகேடான நிதி பயன்பாடுகள் குறித்து ஆராய பிரதமர் மஹிந்த ராஜபக்ச புத்தசாசன கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் என்ற ரீதியில் குழுவொன்றை நியமித்ததுடன், 142 பக்கங்களை கொண்ட அக்குழுவின் அறிக்கை நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. 

அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஒப்புதலின்றி ரூபாய் 400 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 2019 ஆம் ஆண்டில் ஒப்புதலின்றி செய்த செலவினங்களை அங்கீகரிக்க ஆண்டு இறுதியில் பணிப்பாளர் குழு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

திறைசேரியின் ஒப்புதலின்றி 25 நடைமுறை கணக்குகள் பராமரிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வருமானங்களை உள்ளடக்கிய நிதி திட்டங்களில் கணக்கியல் பிழைகள் உள்ளதாகவும் நாணய விதிமுறைகளை மீறி கொள்முதல் செய்தல் மற்றும் முறைசாரா ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இக்குழுவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி காமினி சரத் எதிரிசிங்க, ஓய்வு பெற்ற அமைச்சரவை செயலாளர் கோட்டாபய ஜயரத்ன மற்றும் மூத்த வழக்கறிஞர் ஹரிகுப்தா ரோஹனதீர ஆகியோர் உள்ளடங்குகின்றனர். 

மத்திய கலாசார நிதியத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், 2016/-2019 காலப்பகுதியில் நிதியத்திலிருந்து பாரியளவில் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment