சிறு சிறு விவகாரங்களை பெரிதுபடுத்தும் எதிரணியின் செயற்பாட்டிற்கு ஏமாந்து உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளை மறந்து விடக்கூடாது - பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

சிறு சிறு விவகாரங்களை பெரிதுபடுத்தும் எதிரணியின் செயற்பாட்டிற்கு ஏமாந்து உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளை மறந்து விடக்கூடாது - பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

சிறு சிறு விவகாரங்களை பெரிதுபடுத்தும் எதிரணியின் செயற்பாட்டிற்கு ஏமாந்து உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளை மறந்து விடக்கூடாது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் நல்லாட்சியில் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் தடைப்பட்டதாக கூறிய அவர், சர்வதேச மற்றும் தேசிய சூழ்ச்சிக்காரர்கள் இன்னும் தமது வேலைகளைக் கைவிடவில்லை என்றும் கூறினார்.

நாட்டுக்கு எதிரான உள்நாட்டு வௌிநாட்டு சதிகளை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, வெளிநாடுகளின் தலையீடு முதலில் 2010 ஜனாதிபதித் தேர்தலின்போது ஆரம்பித்தபோது நாட்டு மக்கள் அந்த முயற்சியை தோல்வியடையச் செய்தனர். 

எனினும் 2015ம் ஆண்டு வரை அந்த சூழ்ச்சிகள் தொடர்ந்தன. 2015ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நீங்கி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தீர்மானத்தை எடுத்ததற்கான காரணத்தையும் நாட்டு மக்கள் அறிவர்.

2019 நவம்பர் மாதம் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதால் நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டங்கள் இறுதிவரை முன்னெடுக்க முடியாமல் போனது.எனினும் சர்வதேச மற்றும் தேசிய சூழ்ச்சிக்காரர்கள் இன்னும் தமது வேலைகளைக் கைவிடவில்லை.

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டு சில நாட்களிலேயே மேற்கத்திய நாடு ஒன்றின் தூதரக ஊழியரொருவரைக் கடத்திச் சென்று விசாரணை நடத்தியதாக பொய் நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதனால் புதிய அரசாங்கத்துக்கு மூச்சு விடுவதற்குக்கூட சூழ்ச்சியாளர்கள் அவகாசம் வழங்கவில்லை.

2015ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய நல்லாட்சி சூழ்ச்சியாளர்கள் வெளிநாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிப் பட்டியலையே 2015 அக்டோபர் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கான இணை அனுசரணையை நிறைவேற்றுவதற்காக முன்வைத்த 30/1 யோசனையாகும்.

அவர்கள் இலங்கை இராணுவம் யுத்தக் குற்றம் செய்தவர்கள் என்பதாக ஏற்றுக்கொண்டார்கள். அதற்குப் பின்னர் யுத்தக் குற்ற விசாரணைக்காக வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட விசேட நீதிமன்றத்தை அமைக்கவும் இணக்கம் தெரிவித்தார்கள். 

30/1 யோசனையில் பிரதான வாக்குறுதியை தாம் சொன்னவாறு நிறைவேற்ற முடியாமல் போனால் அதனை வேறு ஒருவகையில் நடைமுறைப்படுத்துவதற்கு நல்லாட்சி அரசு புதிய சட்டங்களை நிறைவேற்றியிருந்தது.

2016 ஆகஸ்ட் பாராளுமன்ற விவாதத்துக்கு இடமளிக்காமல் நல்லாட்சி அரசாங்கத்தினர் காணாமற் போனோரின் அலுவலகம் தொடர்பான சட்டத்தை பலத்காரமாக நிறைவேற்றினர். 2018 மார்ச் மாதம் மகா நாயக்கர்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். எனினும் அதனையும் பொருட்படுத்தாது காணாமற் போனவர்கள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தை இலங்கையில் அமுலாக்குவதற்கு 2018 5ம் இலக்க சட்டத்தை நல்லாட்சியாளர்கள் நிறைவேற்றினர்.

அதன்மூலம் காணாமற் போனோரைத் தேடுவதன்றி இராணுவத்தினரை வேட்டையாடுவதையே மேற்கொண்டனர். 2018 ஆகஸ்டில் குற்ற நடவடிக்கைளின்போது அவசியமான உதவிகளை வழங்கு வதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் 24ம் இலக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட து.

அது வெளிநாட்டுக்கு அல்லது சர்வதேச குற்ற நீதிமன்றத்திற்கு இலங்கையில் அவர்களுக்குத் தேவையான சந்தேகநபர்கள் அல்லது சாடசியாளர்களை இனம்கண்டு அந்த வழக்குகளுக்கான சாட்சியாளர்களை இலங்கையிலிருந்து தேர்ந்தெடுக்க பொறிமுறையொன்றை ஏற்படத்தவே திட்டமிட்டிருந்தனர்.

நாட்டு மக்களுக்கு நாம் முன்வைத்துள்ள வேண்டுகோளானது பாரிய எதிர்பார்ப்பொன்றை வைத்து செயற்பட வேண்டும். நாம் நாடு என்ற ரீதியில் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் என்ன என்பதை இனங்கண்டு எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எதற்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது என்பதை அறிந்து செயற்படாவிட்டால் அழிவையே எதிர்கொள்ள நேரும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.சிறிய விடயங்களை பார்த்து வாக்களித்தால் நாடு,இனம்,மதம் ,கலாச்சாரம் என்பன எதிர்கால சந்ததிக்கு எஞ்சாது.

No comments:

Post a Comment