கல்முனை நகர மண்டபம் பொதுமக்கள் பாவனைக்கு, சபை அமர்வுகள் மீண்டும் பழைய இடத்தில் இடம்பெறும் மாநகர சபை மாதந்த அமர்வில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 30, 2020

கல்முனை நகர மண்டபம் பொதுமக்கள் பாவனைக்கு, சபை அமர்வுகள் மீண்டும் பழைய இடத்தில் இடம்பெறும் மாநகர சபை மாதந்த அமர்வில் தீர்மானம்

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை நகர மண்டபம் விரைவில் பொதுமக்கள் பாவனைக்கு விட கல்முனை மாநகர சபை மாதந்த சபை அமர்வில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை நகர மண்டபத்தை மக்கள் பொது பாவனைக்கு விடுக்கவும் மாநகர சபை அமர்வுகளை முன்னர் இடம்பெற்ற இடத்தில் நடாத்தப்பட வேண்டுமென மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.ரோஷன் அக்தரினால் மாநகர சபை மாதாந்த அமர்வில் கோரிக்கையையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.

கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் தலைமையில் கல்முனை நகர மண்டபத்தில் நேற்று (29) பிற்பகல் (இரண்டு மணியளவில்) இடம்பெற்றது.

இதன் போது உறுப்பினர் ஏ.எம்.ரோஷன் அக்தார் மேலும் இது பற்றி சபையில் உரையாற்றுகையில் கல்முனை பகுதியில் பொதுமக்களுக்காக நிகழ்வுகளை மற்றும் கூட்டங்களை கலாச்சார நிகழ்வுகளை நடாத்த பொதுமக்கள் பல்வேறு அசெளகரியமான நிலையில் உள்ளனர்.

கல்முனை மாநகர சபை கட்டிடமானது புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள நிலையில் கல்முனை மாநகர மாதாந்த சபை அமர்வு நகர மண்டபத்தில் மாற்றப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இதனை பொதுமக்கள் பாவனைக்கு இந்த நகர் மண்டபத்தை திறந்து விடுவது பற்றிய சிக்கல்கள் காணப்பட்டது. 

தற்போது கல்முனை மாநகர சபை புதிய கட்டிடத்திற்கான நிர்மாணத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக இன்னும் சரியான தீர்மானம் இல்லாமல் உள்ள நிலையில் குறிப்பாக ஒரு மாதத்தில் ஒரு தடவை கூட்டப்படுகின்ற மாதாந்த அமர்வுகளில் இவ் நகர மண்டபத்தை பயன்படுவதில் இருக்கின்ற சாதக பாதக விடயங்களை இச்சபையில் கருதிற்கொள்ள வேண்டியுள்ளது .
ஏனென்றால் இவ் நகர மண்டபம் ஆரம்பத்தில் நிர்மாணிக்கபட்ட பின் இதில் பல கலாச்சார நிகழ்வுகள், ஏனைய பொது நிகழ்வுகள் எல்லாம் இவ் மண்டபத்தில் இடம்பெற்று வந்த நிலையில் பின்னர் மாநகர சபையினால் தனியார் நிறுவனமொன்றுக்கு வாடகைக்கு விடப்பட்ட பின்னர் பொதுமக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. அதன் பின்னர் குறித்த தனியார் நிறுவனத்திக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட இவ் கட்டிடத்தின் ஒப்பந்தம் மாநகர சபையினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் கல்முனை மாநகர கட்டிடடமானது புதிதாக கட்டிடம் நிர்மாணிக்கப்பட உள்ள நிலையில் சபை அமர்வுகள் இங்கு இந்த நகர மண்டபத்தில் இடம்பெற்றது. மாநகர கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருந்தால் சபை அமர்வுகள் இங்கு இடம்பெற எந்த ஆட்சேபனையும் இருந்திருக்காது. 

ஆனால் கல்முனை மாநகர கட்டிடம் உடைக்கப்படாத நிலையில் மாதத்தில் ஒரு தடவை இந்த நகர மண்டபத்தில் சபை அமர்வுகள் இடம் பெறும் நிலையில் பொதுமக்கள் இதனை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதையும் இச்சபையில் கவனத்திற்கொள்ள விரும்புகிறேன் .

இன்று தனியார் மண்டபங்களில் நிகழ்வுகள் இடம்பெற அதிக வாடகை காணப்படுகின்றது. எமது பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் நலன் கருதி எமது சபை ஒன்றுகூடலை முன்னர் இடம்பெற்ற இடத்தில் நடாத்துவதன் மூலம் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து வசதிகளுடன் மக்கள் பாவனைக்கு நகர மண்டபத்தினை திறந்து வைக்க வேண்டுமென முக்கிய கோரிக்கையை முன் வைக்கின்றேன் என்றார்.

மேலும் இதன்போது இக்கோரிக்கைக்கு ஆதரவாக ஏ.ஆர்.எம்.அஸீம் அவர்களும் இதனை பொதுமக்கள் பாவனைக்கு விடும்படி சபையில் உரையாற்றினார் .

கல்முனை மாநகர் வாழ் மக்களின் பாவனைக்கு இவ் மண்டபத்தை விடுமாறு என்ற வேண்டுகோளை சபையின் ஏக மனதான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் பழைய இடத்தில் அடுத்த அமர்வு இடம்பெறுமென மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் சபையில் அறிவித்தார்.

No comments:

Post a Comment