போலியான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து தேர்தலில் மக்களின் அரசியல் சிந்தனைகளை திசைத்திருப்ப அரசாங்கம் முயற்சி - ருவான் விஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

போலியான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து தேர்தலில் மக்களின் அரசியல் சிந்தனைகளை திசைத்திருப்ப அரசாங்கம் முயற்சி - ருவான் விஜயவர்தன

(இராஜதுரை ஹஷான்)

போலியான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து பொதுத் தேர்தலில் மக்களின் அரசியல் சிந்தனைகளை திசைத்திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாகவும், எம்.சி.சி. ஒப்பந்தம் ஊடாக யார் நிதியை பெற்றுக் கொண்டார்கள் என்பதை பொறுப்புடன் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ருவான் விஜயவர்தன அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கந்தான பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்யின் தொகுதி அமைப்பாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவா குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தம் பெரிதளவில் பேசப்பட்டன. குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டவர்கள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்தார்கள்.

எம்.சி.சி ஒப்பந்தத்தில் இரண்டு கட்டங்கள் கைச்சாத்திடப்பட்டு அதனூடாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப் பெற்றதாக குறிப்பிடும் தரப்பினர்கள். உறுதியான காரணிகளையும் முன்வைக்க வேண்டும். யார் நிதியை பெற்றுக் கொண்டார்கள் என்பதையும் பொறுப்புடன் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த வேண்டும்.

10 மில்லியன் நிதி கிடைக்கப் பெற்றதாக தற்போது முன்வைக்கும் குற்றச்சாட்டை அமெரிக்க தூதரம் உத்தியோகப்பூர்வ அறிக்கையின் ஊடாக நிராகரித்துள்ளது. இவ்வாறான நிலையிலும் ராஜபக்ஷர்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போலியான குற்றச்சாட்டை முன்வைப்பது கவலைக்குரியது. 

எம்.சி.சி. ஒப்பந்தம் ஊடாக நிதியை பெற்றுக் கொள்ள முதலில் நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்தார்.

அமெரிக்க நாட்டு பிரஜையாக இருந்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து தனது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். போலியான குற்றச்சாட்டை முன்வைத்து பொதுத் தேர்தலில் மக்களின் அரசியல் சிந்தனைகளை திசைத்திருப்ப அரசாங்கம் முயற்சிக்கின்றமை அனைவரும் அறிந்த விடயம் என்றார்.

No comments:

Post a Comment