ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட கம்பஹாவில் எமக்கான பிரதிநிதியை கட்டாயம் வென்றெடுக்கலாம் - வேட்பாளர் சீராஸ் மொஹமட் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட கம்பஹாவில் எமக்கான பிரதிநிதியை கட்டாயம் வென்றெடுக்கலாம் - வேட்பாளர் சீராஸ் மொஹமட்

(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கம்பஹா மாவட்டத்தில், இலக்கம் 15 இல் போட்டியிடும் வேட்பாளர் சீராஸ் மொஹமட் நேற்றைய தினம் (28) மீரிகம தேர்தல் தொகுயிலுள்ள பல்வேறு கிராமங்களில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார். 

மீரிகம தேர்தல் தொகுதியிலுள்ள வேவல்தெனிய, பஸ்யாலை - நாம்புலுவ, எல்லளமுல்ல, கள் எலிய உள்ளிட்ட பல கிராமங்களில் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றது. 

மேற்படி கிராமங்களை சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் மூத்த, இளம் ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் அமைபுபுக்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் 2020 பாராளுமன்ற தேர்தலில் சீராஸ் மொஹமட் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்.
மேலும், இதுவரை காலமும் பல்வேறு அரசியல்வாதிகள் தங்களிடம் வாக்குகளுக்காக மாத்திரம் வீடு தேடி வந்து வாக்குகளையும் பெற்று, பாராளுமன்றமும் சென்ற பின்னர் அவர்களை புறக்கணித்ததாகவும் வேதனைப்பட்டனர். 

100,000 இற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தில், எமது மக்கள் சாதுரியமாக தமது வாக்குரிமையினை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் கட்டாயம் எமக்கான பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று வேட்பாளர் சீராஸ் மொஹமட் தெரிவித்தார். 

மேலும், மேற்படி சந்திப்புக்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீரிகம தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் ஆதிக் மற்றும் 2014 மேல் மாகாண சபை வேட்பாளர் முஸ்தாக் மதனி மற்றும் பிரதேசத்திலுள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment