இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன் - முன்னாள் அதிபர் ஆதம்பாவா - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன் - முன்னாள் அதிபர் ஆதம்பாவா

பாறுக் ஷிஹான்

இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன் என அம்பாறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்த சுயேட்சை குழுவின் அரசியல் புரட்சிகர முன்னணி ஸ்தாபக செயலாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி ஆதம்பாவா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் சீப்பு சின்னத்தில் சுயேட்சை குழு-2 போட்டியிடும் அணி தனது தேர்தல் கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் தானிஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சாய்ந்தமருது பேள்ஸ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடாத்தியது.

இதன்போது குறித்த அணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்த அரசியல் புரட்சிகர முன்னணி ஸ்தாபக செயலாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி ஆதம்பாவா தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது புதிய தோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் தேசத்தை நோக்கிய புரட்சி பயணம் என்ற வாசகத்தை தாங்கிய நிலையில் இத்தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. தற்போது உள்ள அரசியல் கலாசாரத்தில் பிழை உள்ளது எமது விஞ்ஞானத்தில் உள்ளத்திற்கு மாறாக நாங்கள் நடந்தால் எங்களை சுட்டு கொல்லலாம்.

நாங்கள் கடந்த காலங்களில் அரசியல், சமூக, சமய விடயங்களாக இருக்கலாம் இதில் பிழை விடாத என் தலைமையில் அதே பாணியில் பாதையிலும் தான் எல்லோருடைய சேவைகளும் இனி அமையும். அம்பாறை மாவட்டத்தை 12 பகுதிகளாக பிரித்து அங்கு தலைமைத்துவத்தை உருவாக்கி அவர்கள் மக்கள் செயற்பாடுளில் ஈடுபடுவர் அவர்கள் இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன். 

நாங்கள் வாக்களிக்க பணம் கொடுக்க மாட்டோம் ஆனால் பணம் படைத்த வேட்பாளர்கள் தரும் பணத்தை பெற்று எமக்கு வாக்களியுங்கள். ஒவ்வொரு வேட்பாளர்களினதும் கடந்த கால செயற்பாடுகளை சிந்தித்து காலைப்பிடித்து கெஞ்சி கேட்கிறேன் எமக்கு வாக்களியுங்கள் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment