மார்ச் 20 முதல் அமுல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்டம் இன்று முதல் முற்றாக நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 28, 2020

மார்ச் 20 முதல் அமுல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்டம் இன்று முதல் முற்றாக நீக்கம்

இன்று (28) முதல் அமுலாகும் வகையில், நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு நாளும் பல நாட்களாக தொடர்ச்சியாக ஊரடங்குச் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த போதிலும், மக்களின் நடமாட்டம் அதிகளவில் ஏற்படும் என்பதை கருத்திற்கொண்டு, தமிழ், சிங்கள புத்தாண்டு, நோன்புப் பெருநாள், வெசாக் உள்ளிட்ட பௌர்ணமி தினங்கள், ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலம் குறைக்கப்பட்டு, இறுதியாக கடந்த ஜூன் 13ஆம் திகதி முதல், தினமும் நள்ளிரவு 12.00 மணி முதல் 4.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment