கொவிட் 19 அவசர தேவைக்கு IDA அமைப்பு வழங்கும் நிதி அதிகரிப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன தகவல் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 28, 2020

கொவிட் 19 அவசர தேவைக்கு IDA அமைப்பு வழங்கும் நிதி அதிகரிப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன தகவல்

உலக வங்கி அமைப்புக்கு உட்பட்ட சர்வதேச அபிவிருத்தி அமைப்பினால் (IDA) இலங்கை அரசாங்கத்திற்கு கொவிட் 19 அவசர தேவைக்காக வழங்குவதற்கு உடன்பட்டுள்ள நிதி ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உயர் கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் வெகுஜன ஊடகத்துறை மற்றும் அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்கமைவாக சர்வதேச அபிவிருத்தி அமைப்பினால் (IDA) நிதி உதவி வழங்கப்படும் 3 திட்டங்களுக்காக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளாத 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொவிட் 19 காரணமாக அழுத்தத்திற்குள்ளாகியிருக்கும் சமூக பிரிவை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்துவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொடர்பு மற்றும் சொத்து முகாமைத்துவ திட்டம், சுற்றாடல் கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்தை மேற்கொள்ளும் திட்டம்,காலநிலை மாற்றத்திற்கு அமைவான விவசாய - நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் போன்ற 3 திட்டங்களே இவையாகும்.

இதேபோன்று சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் நிலை மாற்று கடன் வசதியின் கீழ் 05 மில்லியன் அமெரிக்க டொலர்களும் தொற்று அவசர நிதி வசதியின் கீழான 1.72 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் 2020 ஜுன் மாதம் 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் நிலைமாறும் நிவாரணக் கடன் தொகையில் மேலும் 22.24 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இதுவரையில் இவற்றின் மூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ள நிதி 87.24 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கும், இதேபோன்று இந்த நிதியத்தில் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட குழுக்களுக்கான வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் 2020 ஜுன் மாதம் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

இந்த நிதி கொவிட் 19 தொற்று பரவுவதன் காரணமாக சமூகத்தில் பெரும் தாக்கத்திற்குள்ளானவர்களை இலக்காகக் கொண்டு சமூக பாதுகாப்பு நடைமுறைக்காக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment