மட்டு. மாவட்டத்தில் தபால் வாக்குப் பொதிகள் தபாலகங்களுக்கு அனுப்பி வைப்பு : 12815 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி - 341 பேர் நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 30, 2020

மட்டு. மாவட்டத்தில் தபால் வாக்குப் பொதிகள் தபாலகங்களுக்கு அனுப்பி வைப்பு : 12815 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி - 341 பேர் நிராகரிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பத்திருந்தோரின் விண்ணப்பங்கள் அடங்கிய பொதிகள் தபாலகங்களுக்கு இன்று வழங்கப்பட்டன. 

மட்டக்களப்பு பிரதம தபாலகத்திற்கு கையளிக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலகத்திலிருந்தும் மாவட்ட தேர்தல் திணைக்களத்திலிருந்தும் இவைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12815 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சசீலன் தெரிவித்தார்.

மொத்தமாக இம்மாவட்டத்தில் 13156 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்த போதிலும் 341 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தோத்தல் திணைக்களம் தரிவித்துள்ளது.

இம்மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளிலருந்தே இவர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரீ.எல்.ஜவ்பர்கான் - மட்டக்களப்பு நிருபர்

No comments:

Post a Comment