முகக்கவசம் அணியாத 1,217 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Monday, June 29, 2020

முகக்கவசம் அணியாத 1,217 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடிய 1,217 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள், தங்களது வீடுகளில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றையதினம் (28) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, அவர்கள் பொதுவிடங்களில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள், 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸார் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad