நாட்டை இராணுவமயப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 19, 2020

நாட்டை இராணுவமயப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு

நாட்டை இராணுவமயப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இந்த அமைப்பின் சார்பில் சட்டத்தரணி லால்விஜயநாயக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை அதிகாரிகள் 30 வருட கால யுத்தம் குறித்த தவறான கருத்துடன் செயற்படுவதன் காரணமாக பாரதூரமான நெருக்கடி உருவாவதாக ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு கருதுகின்றது.

அது ஆயுதப் போராட்டத்திற்கு எதிரான யுத்தம் படையினரால் அதனை வெற்றி கரகமாக தோற்கடிக்க முடிந்தது ஆனால் தற்போது இடம்பெறுவது கொவிட்டிற்கு எதிரான போராட்டம். கொரோனா வைரசினை இராணுவ வலிமையை பயன்படுத்தியோ அல்லது இராணுவ தந்திரோபாயங்கள் மூலோபாயங்களை பயன்படுத்தியோ தோற்கடிக்க முடியாது.

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு பொது சுகாதார அதிகாரிகள் தலைமை தாங்க வேண்டும் அவர்களே முன்ணியில் நிற்க வேண்டும். அவர்களிற்கு ஆதரவளிக்கும் முக்கிய சேவை வழங்குநர்களாக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் கிராம சேவையாளர்கள் போன்றவர்கள் காணப்பட வேண்டும்.

பொது சுகாதார அதிகாரிகளிற்கும் பொதுச் சேவைக்கும் அவர்களது தீர்மானங்கள் மூலோபாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதில் முப்படையினரும் ஆற்ற வேண்டிய பிரதான பங்களிப்பு உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த யுத்தத்தினை எவ்வாறு முன்னெடுப்பது என்ற கொள்கைகள் மூலோபாயங்களை வகுப்பதில் பொது சுகாதார அதிகாரிகளிற்கு உள்ள ஏகபோக உரிமையை அரசாங்கம் பறித்துள்ளதுடன் அதனை முப்படையினருக்கு வழங்கியுள்ளதுடன் பொதுச் சேவையின் முக்கியத்தை புறக்கணித்துள்ளது. இது கரிசனைக்குரிய விடயம்.

ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகளான நாங்கள் இந்த நடவடிக்கையை நாட்டை இராணுவமயப்படுத்துவதை நோக்கிய மற்றொரு நடவடிக்கையாக பார்க்கின்றோம். சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை தெளிவாக இந்தப்போக்கினை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகளான நாங்கள் அரசாங்கத்தினை இந்த போக்கினை கைவிட்டு பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுச் சேவையிடம் தலைமைத்துவத்தை வழங்குவதன் மூலம் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment