வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர் தமது தொழில்கள், கல்வியில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும் - வெளிவிவகார அமைச்சின் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர் தமது தொழில்கள், கல்வியில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும் - வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

(எம்.மனோசித்ரா) 

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர் தமது தொழில்கள் மற்றும் கல்வியில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 38,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டிற்கு மீளத் திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், அவர்களுள் கிட்டத்தட்ட 28,000 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவர். 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் தற்போது முன்னுரிமை வழங்குகின்ற போதிலும், இன்னும் பலர் மீண்டும் நாடு திரும்ப விரும்புகின்றனர். 

அவர்கள் முறையான அந்தஸ்த்தின்றி தங்கியிருப்பவர்களாவதுடன், சட்டவிரோதமானவர்கள் என்பதால், அந்த நாடுகளில் சுகாதார வசதிகள் மற்றும் வேறு எதனையும் அவர்களால் அணுகிக்கொள்ள முடியாது. 

தொழில்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் ஆதரவற்றவர்கள். ஆனால் தொழில்களில் உள்ளவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பைத் தவிர்க்கும் பொருட்டு விடுமுறை நாட்களுக்காக வர விரும்புவோரை நாம் பின்னர் கருத்தில் கொள்ளலாம். 

தொழில் வாய்ப்பினை இழத்தல் அல்லது கல்வி வாய்ப்பினை இழத்தல் அல்லது மீள நாட்டிற்கு திரும்பி வருவதால் ஏற்படக்கூடிய பெரிய தாமதங்கள் குறித்து கவனமாக அளவிடுமாறு, சில காலத்திற்கு முன்பு நாங்கள் மாணவர்களிடம் கோரியதைப் போலவே இந்த ஊழியர்களிடமும் நாங்கள் கோரிக்கை முன்வைக்கின்றோம். 

ஏனெனில், மாணவர்களின் விடயத்தில், சில பெற்றோர் தமது பிள்ளைகள் திரும்பி நாட்டிற்கு வர வேண்டும் என விரும்புகின்றனர், மற்றும் சில பெற்றோர் தமது பிள்ளைகள் தங்கியிருந்து அவர்களது பரீட்சைகளை நிறைவு செய்ய வேண்டுமென விரும்புகின்றனர். எனவே, இவை தனிப்பட்ட விருப்புத் தெரிவுகள் என எனக்குத் தெரியும், இதை மேற்கொள்வதில் பகுத்தறிவுக் கண்ணோட்டம் இருக்க வேண்டும். 

ஏனெனில், வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் கண்ணோட்டத்தில், இன்று அவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதில் நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கின்றோம். ஆனால், அவர்களது கல்வி அரையாண்டினை இழக்க நேரிடுகையில், ஒரு மாதம், இரண்டு மாதங்களின் பின்னர் மாணவர்களாகிய அவர்களின் நிலையை மீண்டும் சரி செய்ய முயற்சிக்குமாறு மீண்டும் எம்மிடம் கோரிக்கை விடுக்கப்படும் என எனக்குத் தெரியும். தொழில் வாய்ப்பை இழப்பவர்களுக்கும் இதே நிலைதான். 

எனவே, வெளிநாட்டு உறவுகள் அமைச்சும், அரசாங்கமும் மக்களை திரும்ப அழைத்து வர முயற்சிக்கும் அதே அளவுக்கு, திரும்பி வர விரும்பும் இந்த மக்கள், குறுகிய காலத்திற்கு வர விரும்புவதைத் தவிர்த்து, அவர்களது அத்தியாவசியத் தேவைகளை மிகவும் கவனமாக மதிப்பீடு செய்தல் வேண்டும். இந்த வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதற்கு இது சிறந்த நேரமாக இருக்காது என்பதுடன், அவர்கள் இங்கு வரும்போது 21 நாட்களுக்கான தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும். 

நாடு திரும்பாது பின்வாங்குவோருக்கு முடிந்தவரை உதவிகள் மேற்கொள்ளப்படுவதனை உறுதி செய்வதற்கு நாங்கள் முடிந்தவரை முயற்சிப்போம், குறிப்பாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர்கள் இருக்கும் இடத்திலேயே நிர்வகிக்கும் பொருட்டு, எமது 67 தூதரகங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 16 வலையமைப்புக்கள் மூலமாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்கும் மற்றும் தேவையானபோது மருந்துப் பொருட்களை வழங்குவதற்கும் முயற்சிக்கின்றோம். 

குறுகிய கால விஜயங்களில் இருப்பவர்களைப் பொறுத்தவரை, நாம் அவர்களை மீண்டும் அழைத்து வர வேண்டும். அவர்கள் எங்கும் செல்ல முடியாது. நாங்கள் அதை அறிந்திருக்கின்றோம். ஓரளவிற்கு நிலவும் சிரமம் என்னவென்றால், அவர்கள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளனர் என்பதுடன், தற்போது சேவையிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சரக்கு விமானங்கள் கூட இந்தத் தலைநகரங்களில் பலவற்றிற்கு செல்வதில்லை. 

எனவே, ஏற்கனவே வரும் விமானங்களில் விஜயம் செய்வதற்கு அவர்களை நாங்கள் ஒருங்கிணைக்கும்போது, அவர்கள் அனைவரையும் எவ்வாறு நாம் மீள அழைத்து வரப் போகின்றோம் என்பது ஒரு முக்கிய விடயமாக அமைவதுடன், அது குறித்து தற்போது மிகவும் உயர்ந்த மட்டங்களில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்றார். 

No comments:

Post a Comment