ஐயாயிரம் ரூபாய் நிதியுதவி குறித்து பல முறைப்பாடுகள் - உன்னிப்பாக அவதானிக்கின்றது கணக்காய்வாளர் திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 19, 2020

ஐயாயிரம் ரூபாய் நிதியுதவி குறித்து பல முறைப்பாடுகள் - உன்னிப்பாக அவதானிக்கின்றது கணக்காய்வாளர் திணைக்களம்

இலங்கை அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும் திட்டத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என பிரதி கணக்காய்வாளர் நாயகம் லலித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களிற்கு அரசாங்கம் வழங்கும் 5000 ரூபாய் விநியோகிக்கப்படும் விதத்தினை அவதானித்து வருகின்றோம் என தெரிவித்துள்ள அவர் இது தொடர்பில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.

பயனாளர்களை தெரிவு செய்யும்போது பல முறைகேடுகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

கிராமமட்டத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து கணக்காய்வு விசாரணை இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் விரைவில் நாங்கள் இது குறித்த ஆரம்ப கட்ட அறிக்கையை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தவர்களிற்கு உதவுவதற்காக அரசாங்கம் 5000 வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நிதியுதவியை பெறவேண்டியவர்கள் குறித்து தாங்கள் ஒரு பட்டியலை தயாரித்துள்ள போதிலும் அரசியல் ஆதரவுடன் வேறு ஒரு பட்டியலை திணிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக கிராம சேவையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment