கலாநிதி சுக்ரியின் மறைவானது இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்தில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது - காதர் மஸ்தான் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 19, 2020

கலாநிதி சுக்ரியின் மறைவானது இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்தில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது - காதர் மஸ்தான்

இலங்கை இஸ்லாமிய கல்விப்புலத்தில் பெரும் ஆளுமையாக மாத்திரமன்றி ஒரு அறிஞர்களும் திகழ்ந்த கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் கொண்டேன் என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

காஞ்சென்ற கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு குறித்து அவர் விடுத்தள்ள அனுதாபச் செய்தியிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிகவும் இக்கட்டானதொரு காலப்பகுதியில் எம்மைப் பிரிந்த கலாநிதி அவர்களின் இழப்பு முஸ்லிம்களின் புத்திஜீவிகள் மத்தியில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரிய பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைகழகத்தில் கலாநிதியாகிய அன்னார் சர்வதேச மட்டத்தில் புகழ் பூத்த ஒருவராக இருந்த போதிலும் தாய்நாடாம் இலங்கைத் திருநாட்டுக்கே அவரது சேவைகளை செய்த தியாகப் பெருந்தகையாக மிளிர்ந்தார்.

கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் ஆற்றல் மிக்க உரைகளும் ஆழமான கருத்துக்கள் கொண்ட எழுத்து வன்மையும் பரந்த சிந்தனையும் இலங்கை முஸ்லிம்களிடத்தில் அழியாத்தடம் பதித்துள்ளது. 

1978 ஒக்டோபர் முதல் வெளிவரும் இஸ்லாமிய சிந்தனை எனும் சஞ்சிகையில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கங்கள் அவர்களது சிந்தனை வீச்சிக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

ஜாமியா நளீமிய்யா கலாகூடத்தின் ஆயுட்கால பணிப்பாளராக தமது பணிகளை திறமையாக செய்ததுடன் பல்லாயிரம் மாணவர்களின் நல் ஆசிரியராக திகழ்ந்தார்.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், ஆலிம்கள் கல்விப்புலம் சார்ந்தவர்கள் அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாருக்கவும் மனமுருகி பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad