அம்பாரை மாவட்டத்தில் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Sunday, May 31, 2020

அம்பாரை மாவட்டத்தில் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கிழக்கு மகாணத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் முகமாக மற்றும் நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களத்தினால் அம்பாரை மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு முதற்கட்டமாக ஒரு மில்லியன் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகள் குளங்களில் விடப்பட்டன.

இதற்கமைய மாவட்டத்தில் கல்முனை, நாவிதன்வெளி, அக்கறைப்பற்று, திருக்கோயில், பொத்துவில், பதியத்தலாவ, மஹாஓயா ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குளங்களுக்கு திலாப்பியா, கட்லாகட்லா, மிரிகால், ரோகு, வகையான நன்னீர் மீனினங்கள் கடந்த நான்கு தினங்களாக (புதன் கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரையான காலப்பகுதியில் விடப்பட்டு முதற்கட்ட செயற்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதாக அம்பாறை மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர் எம்.எல்.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் கடலில் மீன்பிடியானது இக்காலப்பகுதியில் மிகவும் குறைவாக காணப்படுவதால் இதனால் மீனின் விலையேற்றம் அதிகமாக காணப்படுகின்றது. இதனை இவ் நன்ணீர் மீனினங்கள் நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இவ்வாறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மேலும் இத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க செயலாற்றிய கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்கள பணிப்பாளர், அம்பாரை மாவட்ட அலுவலக நீரியல் வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.

No comments:

Post a Comment