கடற்படை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்தி - சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 7, 2020

கடற்படை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்தி - சட்ட நடவடிக்கை

கடற்படை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக கடற்படை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கடற்படை கொவிட்-19 தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டிருப்பதாக சமூக ஊடகங்கள் மூலமும் செய்தி இணையத்தளங்கள் சில வற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

கொவிட்-19 தொற்று பரவுவதை தடுக்கும் வேலைத்திட்டத்தின் தேசிய பொறிமுறைக்குள் கடற்படையினால் மேற்கொள்ளப்படும் எந்தவித பணிகளிலிருந்தும் கடற்படை விலகிக் கொள்ளவில்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளிலும் கடற்படை ஆகக்கூடிய பங்களிப்பை வழங்கி செயல்படுவதை இதன் மூலம் வலியுறுத்துகின்றோம்.

இதேபோன்று இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

டப்ளியு.எம்.ஐ.ஆர்.எல்.சூரிய பண்டார
லெப்டினன் கமாண்டர்
ஊடக இணைப்பு அதிகாரி கடற்படை தளபதிக்கு பதிலாக

No comments:

Post a Comment